ஒரு குட்டி கதை

 

                ஒரு குட்டி கத  மூலமா life ah எப்படி positive ah வாழுரதுன்னு சொல்லுறேன் . ஒரு அழகான நதி ஓரத்துல ஒரு மீனவன் தனிமையில உட்காந்து இருக்ககுறான்.அந்த வழியா ஒரு பணக்கார தொழிலதிபர் வராரு, அப்போ அவர் அந்த மீனவனை பார்த்து என்னபண்ணிட்டு இருக்கணு கேக்குராறு அதுக்கு அந்த மீனவன் தன்னோட இன்னைக்கு தேவையான
மீன் எல்லாதாயும் புடிச்சிடேன் அதான் அமைதியா உட்காந்து என்னோட அழகான நினைவுகளையும் இயற்கையையும் ரசிச்சுகிட்டு இருக்கேன்னு சொல்ரார். அதுக்கு அந்த தொழிலதிபர் உன் கிட்டதான் இன்னும் நேரம் இருக்கே நீ இன்னும் கொஞ்ச நேரம் ரொம்ப தூரம் போய்ட்டு மீன் புடிச்சா உனக்கு நிறைய மீனுங்க கிடைக்கும் அதிக வாசி நீ இன்னொரு படகு  வங்காலாம் அத வச்சிக்கிட்டு நீ இன்னும் அதிகமான மீன் புடிக்கலாம். அதுல கிடைக்குற பணத்த வாசி ஒரு பெரிய வீடு காட்டலாம். ஒரு 10 வருஷதுலயே நீயும் என்னைமாறி ஒரு பெரிய பணக்காரனாய் வந்துடாலம். உன்னை நிறைய பேறு மதிப்பாங்க. உனக்கு நிறைய புகழ் கிடைக்கும். அதுக்கப்புரம், நீ ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கலாம் அப்புடினு சொன்னாரு. 

            அதுக்கு அந்த மீனவன் சொன்னான் நீங்க சொன்ன அந்த மகிழ்ச்சியான நிலைமைலாதான் நான் இப்போவே இருக்கேனே நான் எதுக்கு 10 வருஷத்த வீணாக்கணும். என்னோட இன்றைக்கு தேவையான மீன நாம் புடிக்கிட்டேன் நாளைக்கு தேவையானதை புடிசிக்க தேவையான சக்தி என்கிட்ட இருக்கு.
என்னுடை தேவை ரொம்ப சின்னதுதான். அழகான வீடு அன்பான மனைவி என்னோட நலத்தை விரும்புற பிள்ளைகள். இது எல்லாமே என்கிட்ட இருக்கு ரொம்ப மானநிறைவோட என்னோட வாழ்க்கையை வழந்துகித்து இருக்கேன் என்கிட்ட நாளையை பத்துன பயம் இல்லை அது நல்லதாய்  தான் இருக்கும்ன்ற நம்பிக்கை இருக்கு அப்புடினு சொல்ராறு.அந்த பணக்காரர் எதுவும் பேச முடியாம  அமைதியா அந்த இடதுல இருந்து கிளம்புரார்.   
                 

            கொஞ்சம் யோசிச்சி பாருங்க நாம இல்லாருமே அந்த பணக்காரர் சொல்ற வாழ்க்கையை தான் வாழணும்னு ஆசைபடுறோம். நாளைக்கு நாளைக்குனு ஓடிக்கிட்டே இருக்கமே தவிர இன்றைய சந்தோஷத்தை நாம பாக்குறது இல்லை. வாழக்கைல நாம ரொம்ப குறைவா பயன்படுதுற வார்த்தை "போதும்" அந்த வார்த்தைய கொஞ்சம் அதிகமாய் பயன்படுத்தி பாருங்க அந்த வார்த்தைய மீறுனா ஒரு சந்தோஷம் தன்னாலையே உங்ககிட்ட வந்து சேரும்.
                     

 

                                       "நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்"
  

Post a Comment

0 Comments