தமிழர் படும் பாடு




காவிரி மீதினிலே கல்லணை கட்டினோம், 
களிறு கொண்டு போரடித்து- நெற்களஞ்சியம் செய்தோம்
காவிரியின் கரையுடைய மண் சுரண்டும் அகழ்ர்தி
வூகள்... 
கையளவு தண்ணீர் கேட்டு கால் கடுக்க நடக்கின்றோம் 
குடவோலை தேர்தல் செய்தோம், 
குடிமக்கள் குறை கேட்டோம்
தொண்டரில்லா கட்சியிலும் இன்று 
குண்டர்களின் ஆட்சி! 
கலவரமும் பணபலமும் 
தேர்தல் களக் காட்சி, 
தமிழர் படும் பாடு...! 
என்று சொல்லி தீரும் 
எம் தமிழர் பண்பாடு! 

Post a Comment

0 Comments