விபத்து



விலகிச் சென்றாலும்
விட்டுவிடுவதில்லை
பணம் படைத்தவர்களின்
விரைவு வண்டி என்னும் எமன்!
விதியால் நேர்ந்தது என்று கூறி
மதியை ஏமாற்ற முடியவில்லை!
கடவுளும் பொய்த்து விடுகிறான்
கண்மூடித்தனமாய் நிகழும்
விபத்துக்களின் மத்தியில்
"தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் வாக்கியம்
இங்கு மட்டும் விதிவிளக்காகி விடுகிறது போலும்!!

Post a Comment

0 Comments