அன்பே கோயில் அறிவே தெய்வம்
ஆழம் சிறந்தது அகலத்தை விட
இயற்கையோடு இன்புற்றிரு
ஈட்டியதைப் பகிர்ந்துண்
உண்மையாய் இரு உனக்காயினும்
ஊழல் என்பது கொடுஞ்சொல் என்றுணர்
எண்ணத்திலே வண்ணம் அகற்றாதே
ஏமாற்றிப் பிழைக்க எள்ளளவும் நினையாதே
ஐம்பூதங்களையும் ஆழமாய் உற்றுநோக்கு
ஒப்பீடு செய்ய ஒருபோதும் விழையாதே
ஓதாத நாள் வாழ்வில் போதாத நாள்
ஔடதம் தொடு அரிதான நாட்களில்
அ(ஃ)றிணையிலும் உயர்திணை காண்...
0 Comments