
வட்ட முகம்
வகுடெடுத்த கூந்தல்
வர்ணிக்க இயலாத குரல்
அந்தப் பேரழகியின்
உண்மையான பெயர் கூட தெரியாது எனக்கு...
பரிமாறிய வார்த்தைகள் எல்லாம்
வரி மாறாமல் நினைவில் இருக்கிறது
இரண்டே மணி நேரம்
நீ உதிர்த்த காதலை
இனி நான் உணர
ஈரேழு பிறவியும் போதாது
கண் விழித்தவுடன் தான் உணர்ந்தேன்
கலைந்தது கனவு மட்டுமல்ல - என்
மன உள்ளத்தில்
மழை வெள்ளத்திற்காக
காத்திருந்த கரிய மேகங்களும் தான்
கனவு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்
கர்ப்பப்பை எதுவென்று கண்டுபிடித்து
காலம் கடந்து வந்தேனும்
உன்னை கரம் பிடிப்பேன் - அதுவரையில்
கலங்காதே கண்மணியே.
இப்படிக்கு
உன்னைக் கனவில் களவாடியவன்
0 Comments