காதல் கண்மணி - களவாடிய பொழுதுகள்

 

அளவான அழகுக்காரி
ஆர்ப்பரிக்கும் பேச்சுக்காரி
அகற்றிவிட்டால் என்
அக வலிகளை
அலர் அளவும் வளர விடாமல்
உறக்க நேரங்களை எல்லாம்
இரக்கமில்லாமல் களவாடியவள்
உண்ணும் நேரம் மட்டும் ஏனோ
உரையாட மறந்து விட்டாள்
காரணமில்லா கதைகள் ஏராளம்
கதைத்து கதைத்தே
களிகொள்கின்றன நிமிடங்கள்
வார்த்தை தீரும் நாளே எங்கள்
வாழ்க்கை தீரும் நாளாக இருக்கட்டும்!

Post a Comment

0 Comments