காதல் கண்மணி - தெளிவான குழப்பம்
விட்டுவிலக நினைக்கும் நேரங்களில்தான்
விரைவாய் நகர்கிறது கால்கள்
உன்னை நோக்கி...
சரியா தவறா எனப்
பகுப்பாய முடியவில்லை
எதுவாயினும்
பரவசமாகவே நகர்கின்றன நாட்கள்
இதுவே ஒரு நாள்
நரக வேதனையில் ஆழ்த்தும்
என்பதையும் நான் அறிவேன்
நாளைய அழுகைகாக
இன்றைய சிரிப்பை தொலைத்தவனாய்
இருக்க விரும்பவில்லை...
0 Comments